விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா பந்தனேந்தல் கிராமத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருவடி மலையில் இருந்து உருவான குண்டாறு புண்ணியநதியின் தென்பகுதி கரையில் பந்தனேந்தல் வடக்குத்தெரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட காவல் தெய்வமாம் கருப்பணசுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் வருடம் தோறும் மாசிமாதம் கடைசி வெள்ளியன்று இரவு சுமார் 2 மணியளவில் உருண்டைச்சோறு பிரசாதமாக ஆண்களால் சமையல் செய்து ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த வழக்கம் 150 ஆண்டுகளாக தொன்று தொட்டு வழிபட்டு உருண்டை சோறு ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த உருண்டையின் மகிமை என்னவென்றால் சதுரகிரி மலையில் உருவான ஆற்று நீரில் மூலிகை கலந்து வருவதால் அன்றைய காலத்தில் ஊற்று தோண்டி அந்த நீரில் உருண்டை பிடிப்பது வழக்கம்.ஆதலால் அன்றைய ஆண்களுக்கு எந்த விதமான நோய்களும் அண்டுவதில்லை என்பது ஐதீகம்.
ஒருமுறை விருதுநகர் மாவட்டம் முழுவதும் காலரா(வைரஸ்)நோய் பரவிய போது அன்றைய பூசாரி.ராமசாமித்தேவரும்.சாமியாடி கீரித்தேவர் என்பவர் சாமி அருள் வந்து விபூதியால் பந்தனேந்தல் வடக்குத்தெரு நான்குபுறமும் எல்லைக்கோடு வரைந்து அன்றைய வைரஸ் நோயவரவிடாமல் தடுத்தார் என்பதை இன்றைய மூதாதையார் சொல்லியததாக பங்காளிகள் நம்புகின்றனர்.அதற்கு காரணம். இந்த மூலிகைநீரில் செய்த உருண்டையும்.காவல் கருப்பணசுவாமியின் அருளும் தான் காரணம் என்று மக்கள் கூறுகின்றனர்.இந்த நிகழ்வு நடந்து 70ஆண்டுகள் ஆனாலும் இன்றைய நாகரீக காலத்தில். அதே தேதி. மாதம் கிழமை ஒன்றினைந்து வருவதால். அதேமாதிரி வைரஸ் (கொரனா)நோய் நாடு முலுவதும் பரவுவதாலும் மக்கள் ஆண்கள் அனைவரும் இந்த கோவிலில் உருண்டைச்சோறு பிரசாதமாக சாப்பிட்டால் நோய்களிலிருந்து காப்பாற்றலாம்.கருப்பணசுவாமியின் அருளைப்பெறலாம் . என்பது பந்தனேந்தல் வடக்குதெரு பங்காளிகளின் நம்பிக்கை.
இதில் சிறப்பு என்னவென்றால் அன்றைய காலரா நோய் பரவிய வருடமும் இன்றைய களரி நடக்கும் நாளும் ஒன்றாக வருவது இறைவன் மீது பக்தர்கள் வைக்கும் நம்பிக்கை.இந்த உருண்டைச்சோறு பச்சரிசியில் தயார் செய்து கறிக்குழம்புடன் சேர்த்து உண்பது மிகப்பெரிய ருசியைக்கொடுக்கும்.ஆனாலும் எச்சில் படாமல் செய்யும் பிரசாதம் எந்த விதமான காரத்தையும் தருவதில்லை. சாப்பிடும் போது குடிப்பதற்கு தண்ணீர் தருவதும்இல்லை இது காவல் கருப்பணசுவாமியின் சிறப்பு.நமது மூதாதையர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.
எனவே எந்த வருடமும் இல்லாமல் இந்த களரி வருடம் 06.03.2020 அன்று ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக பயபக்தியுடன் விரதம் இருந்து இந்த உருண்டைச்சோற்றை வாங்கி சாப்பிடவேண்டும் என்று பங்காளிகள் விரும்புகின்றனர். ஆச்சாரம் அனுஷ்டானம் என்பதெல்லாம் வேடிக்கை விஷயங்கள் அல்ல.அவற்றின் விஞ்ஞான உண்மைகளை புரிந்து கொள்ளவே நமக்கு பல தலைமுறை ஆகிவிடும்.அதனால் மிககொடிய வைரஸ் நோய்களை வரவிடாமல் தடுத்தற்கு. பங்காளிகளின் கட்டுப்பாடுகளும். ஒப்பற்ற பண்பாடும்.கலாச்சாரமும்.நம்மூதாதையர்களை விட அறிவாளிகள் இந்த ஊரில் இல்லை என்பதை நாம் மனதில்கொள்ளவேண்டும்.நீங்களும் வாழ்க்கையில் ஒருமுறையாவது இக்கோவிலுக்கு களரி அன்று சென்று உருண்டைச்சோறு வாங்கி சாப்பிட்டு நோயிலிருந்து காப்பாற்றவும்.கருப்பணசுவாமியின் அருளைப்பெறவேண்டும் என்பது பங்காளிகளின் எதிர்பார்ப்பு......