காஞ்சிபுரம் மாவட்ட சைல்டு லைன் - ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா இணைந்து குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.






மதுராந்தகம்

 

காஞ்சிபுரம் மாவட்டம்  குழந்தைகள் தின விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பொற்கரங்களால் குழந்தைகள் நண்பர்கள் என்று வாரந்தோறும் நடக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  

அதைத் தொடர்ந்து  இலத்தூர் ஒன்றியத்தில் குழந்தைகள் உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் மனித சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடுகப்பட்டுடில் அமைந்துள்ள குளோபல் லெதர் தொழிற்சாலைப் பணியாளர்கள்  மனித சங்கிலியில் ஈடுபட்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உதவி ஆய்வாளர் விஜயகுமார் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து பணியாளர்களிடம் எடுத்துரைத்தார்.  நிகழ்ச்சியில் வரவேற்புரையை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வேலு வழங்கினார். குளோபல் லெதர் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் சுதாகர் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட மேலாளர்  சரவணன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். நன்றியுரையை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் சித்தாமூர்ர அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  கோகிலா, கீதா,  பொண்ணுவேல்  அன்பரசு, குணசேகரன்,  செல்வி, ஆகியோர் சிறப்பாக செய்தனர்.